நமது வெப்சைட்டில் 136 நாடு இணைந்துள்ளது.
எங்களது முத்தாலங்குறிச்சி டாட் காம் வெப்சைட்டில் 136 வது நாடாக வடக்கு ஆப்பிரக்கா மக்ரிபு பகுதியில் அமைத்துள்ள மொரோக்கோ நாடு சேர்ந்துள்ளது என மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நாட்டில் வசிக்-கும் தமிழ் நெஞ்சம் ஒன்று நமது வெப்சைட்டில் பங்கேற்று உள்ளது. அவருக்கு மிக்க நன்றி. எனது நூல்களையும், எனது வெப்சைட் பற்றி நான் எழுதும் கட்டுரை ஸ்ரீவைகுண்டம் டூடே நியூஸையும் கண்டு ஆதரவு கொடுக்கும் அனைத்து வாககர்களுக்கும் மிக்க நன்றி-. இது வரை ஐந்து லட்சத்து 21 ஆயிரம் வாசகர்கள் நமது வெப்சைட்டை கண்டு ரசிக்கிறார்கள் என்பது எங்களை உற்சாகம் படுத்துகிறது.
எங்களோடுதற்போது இணைந்த நாட்டை பற்றி சிறு குறிப்பு ஒன்றை காணலாம்.
மொரோக்கோ அதிகாரபூர்வமாக மொரோக்கோ இராச்சியம் என்பது வடக்கு ஆப்பிரிக்காவில் மக்ரிபு பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது வடக்கே நடுநிலக் கடல், மேற்கே அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகியவற்றையும், கிழக்கே அல்சீரியா, தெற்கே மேற்கு சகாராவின் சர்ச்சைக்குரிய பிரதேசத்தையும் நில எல்லைகளாகவும் கொண்டுள்ளது. மொரோக்கோவின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 37 மில்லியன். இசுலாம் இதன் அதிகாரபூர்வ சமயம். அரபு மொழியும் பெர்பர் மொழிகளும் இதன் அதிகாரபூர்வ மொழிகள் ஆகும். பிரான்சியமும், மொரோக்கியப் பேச்சுவழக்கிலான அரபு மொழியும் பரவலாகப் பேசப்படுகின்றது. இங்குள்ள மக்களின் பண்பாடு பொதுவாக அரபு, பர்பர், ஆப்பிரிக்க, ஐரோப்பியப் பண்பாடுகளின் ஒரு கலப்பு ஆகும். இதன் தலைநகரம் ரபாத், மிகப்பெரிய நகரம் காசாபிளாங்கா.


