தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கான காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் (28.06.2025) இன்று கருங்குளம் அருகேயுள்ள சேரகுளம் அரசு துணை சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
முகாமினை டி.வி.எஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் திரு.இ.பாலசுப்ரமணியன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் திரு.ச.இசக்கி மஹாராஜன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இம்முகாமில் 48 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 28 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் நன்றி கூறினார்.
இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் திருமதி.ச.கிருஷ்டி, சுகாதார பார்வையாளர் திருமதி.ந.முத்து லட்சுமி, திரு.ப.முத்துவேல் இடைநிலை சுகாதார செவிலியர்கள் திருமதி.செ.சிவசக்தி, திருமதி.மு.ரம்யா கோகிலா, சுகாதார தன்னார்வலர்கள் திருமதி.சு.சிவ சகிலா, திருமதி.மு.சுமதி, சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


