தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில் “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பிரதான சந்திப்புகளிலும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளிலும் உயரம் குறைவான மின் விளக்கு கோபுரங்கள் அமைத்து வருகின்றோம்.
அதன் ஒரு பகுதியாக மாநகர மக்களின் கோரிக்கையினை தொடர்ந்து அழகேசபுரம் மற்றும் செல்வநாயகபுரம் சந்திக்கும் இடத்திலும், ஒன்றாம் கேட் செயின்ட் பேட்ரிக்ஸ் சர்ச் அருகிலும் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


