திருச்செந்தூரில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கரம்பவிளை கீழத் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் இசக்கிமுத்து (38), கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு விமலா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தாராம்.
இதனால் மன உளைச்சலில் இருந்தவர் நேற்றிரவு தனது வீட்டில் மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


