தூத்துக்குடியில், மின்சார வாரியம் பணியாளர் மற்றும் அலுவலருக்கான விளையாட்டுப் போட்டியை தலைமை செயற்பொறியாளர் ரெமோனா துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் பணியாளர் மற்றும் அலுவலருக்காக ஆண்டுதோறும் நடத்தும் மாநில அளவிலான ஆடவருக்கான குழு விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகளுக்கு முன்னோட்டமாக வட்ட அளவிலான வீரர்கள் தேர்வு ஜூன் 5, 6 ஆகிய இரண்டு நாட்கள் தூத்துக்குடியில் தருவை மைதானத்தில் நடைபெறுகிறது. விளையாட்டு போட்டிகளை தலைமை மேற்பார்வை பொறியாளர் ரெமோனா தொடங்கி வைத்தார். செயற்பொறியாளர் ஊரகம் சின்னத்துரை முன்னிலை வகித்தார்.
துவக்க விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், மின் பகிர்மான வட்ட விளையாட்டு பொறுப்பாளர் சந்தனராஜ், விளையாட்டு வீரர்கள் சேசு, கென்னடி, கலைக்கண்ணன், ஆரோக்கிய, ராபின், அசோகன், எட்மன்ட், தமிழரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்படும் வீரர்கள் 16, மற்றும் 18 அன்று விருதுநகரில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்வில் திரளான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.


