ஆழ்வார்திருநகரியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை சார்பதிவாளர் அலுவலகம் ஓட்டுக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதையடுத்து பல லட்சம் மதிப்பில் புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டும் பணிகள் தொடங்கியது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பே கட்டுமானப் பணிகள் முழுவதும் நிறைடைந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் தற்போது வரை இந்த சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் சார்பதிவாளர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
எனவே ஆழ்வார்திருநகரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


