வல்லநாடு சாதுசிதம்பர சுவாமிகள் அறககட்டளை சார்பில் மகா புஷகர்தினை முன்னிட்டு வருகிற 14 ந்தேதி அகரத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
சாது சிதம்பர சுவாமிகளால் மிகவும் போற்றப்பட்ட நேசிக்கப்பட்ட இடம் அகரம் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள தசவதார தீர்த்த கட்டம். காசிக்கு இணையாக வடதிசையிலிருந்து தெற்கு நோக்கி பாய்ந்து ஓடுகிறது. தாமிபரணி இந்த இடத்தை வல்லநாடு சுவாமிகள் தட்சனகங்கை என்று அழைப்பார்கள்.தசவதார பெருமாள் கோவில் அமைந்துள்ள இந்த இடம் தாமிபரணி மகாத்மியம் என்ற வரலாறு புத்தகத்தில் தசவதார தீர்த்தக கட்டம் என்று அழைககப்படுகிறது. 144 ஆண்டுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாபுஷ்கர விழாவை நம் தாமிபரணி அண்னைக்கு நன்றி போற்றும் வகையில் 12.10.2018 முதல் 23.10.2018 வரை 12 நாட்களும் திருமஞ்சன அபிசேகம் மற்றும் மங்கள ஆரத்தி தினமும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் அறக்கட்டளை மற்றும் தொண்டர் குலத்தின் சார்பாக 14.10.2018 ஞாயிறு அன்று மாலை 3.00 மணியளவில் பாறைக்காடு அருள் ஆனந்த செந்தில் விநாயகர், பெருமாள் ஆலயத்திலிருந்து திருமஞ்சன அபிசேகபொருட்கள் புஷ்பங்களோடு நம் சன்மார்கக தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள பந்தலில் அகவல் பாராயணம் முறையே சிவபுராணம் விநாயகர் அகவல் பாடல்கள் பாடி மாலை 6.00 மணியளவில் அன்னை தாமிரபரணி நதிக்கு அனைத்து அபிசேகமும் செய்து 6.45 மணியளவில் மங்கள ஆரத்தி தீபாரதனை செய்யப்படவுள்ளது. இந்த வேளையில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என சாது சிதம்பர சுவாமிகள் அறககட்டளை சார்பில் வேண்டுகோள் விடுககப்பட்டுள்ளது.


