கழுகுமலை அருகே தண்ணீர் லாரியில் மின்சாரம் பாய்ந்ததில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே துலுக்கர்பட்டி சிவகாமி நகர் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முனீஸ்வரன் (27). இவர், கழுமலையைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரது டேங்கர் வண்டியில் சென்று வீடு, கடைகளுக்கு தண்ணீர் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.
இந்நிலையில் நேற்று துலுக்கர்பட்டி நடுத்தெருவில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டில் டிரம்மிலிருந்து தண்ணீர் வண்டியின் மின் வயரை எடுத்தபோது, முனீஸ்வரன் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


