தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக 2பேரை போலீசார் கைது செய்து, 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். பூபால்ராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே மது விற்றதாக, செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த கந்தசாமி (69) என்பவரைக் கைது செய்து, 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், நேரு காலனி பகுதியில் மது விற்றதாக அதே பகுதியைச் சேர்ந்த சங்கரேஸ்வரன் (45) என்பவரைக் கைது செய்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


