தங்கம்மாள்புரம் தேவாலயத்தில் புதிய குருவானவருக்கு சபை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலம் தங்கம்மாள்புரத்தில் புதிய குருவானவராக திருமண்டல நிர்வாகத்தால் ஆயர் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜீன் 2ஆம் தேதி முதல் தங்கம்மாள் புரம் சேகர் குருவாக பணியாற்றுபவர். கடந்த ஒரு வருடமாக தங்கம்மாள்புரம் சேகரத்தில் குருவானவர் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் புதிதாக நியமிக்கபட்டிருக்கிற குருவானவர் தேவாசீர்வாதம் 28ம் தேதி சபை மக்களை சந்தித்தார். இந்நிகழ்வின் போது சபை பொருளாளர் எஸ்.டி ஆர் விஜயசீலன் தலைமையில் சபை ஊழியர் பாலசிங், முன்னாள் கமிட்டி உறுப்பினர்கள் துரைசிங், ஜெபராஜ் ,பீட்டர்,ஜெயா மற்றும் சபை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருமண்ட நிர்வாகத்தால் புதிய குருவானவரை நியமித்தது தங்கம்மாள் புரம் சேகர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


