தூத்துக்குடியில் காதல் தகராறில் மோட்டார் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி டூவிபுரம் 10வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன் என்ற சஞ்சய் (21). இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அந்த பெண் இவரிடம் பேசவில்லையாம். கடந்த 28ம் தேதி பெண்ணின் உறவினர் ஒருவர் மணிகண்டனிடம் போனில் பேசியபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் மதுபோதையில் வந்த மணிகண்டன் என்ற சஞ்சய், டூவிபுரம் 5வது தெருவில் உள்ள சீனிவாசன் என்பவரது வீட்டு முன்னால் நிறுத்தி வைத்திருந்த பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதைப்பார்த்து சீனிவாசன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளார்.
எனினும் இதில் பைக் பாதியளவில் எரிந்து சேதமானது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து மணிகண்டன் என்ற சஞ்சய்யை போலீசார் தேடி வருகின்றனர்.


