தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு ஆறுமுகநேரி பேரூர் கழகத்தில், சீனந்தோப்பு கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்தில், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் டிவிஏ பிரைட்டர் தலைமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் திரு விஜய் ஆனந்த் மற்றும் திருச்செந்தூர் ஒன்றிய கழக செயலாளர் ராஜ்குமார் , ஆறுமுகநேரி பேரூர் கழக செயலாளர் நிவாஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், உடன்குடி ஒன்றிய செயலாளர் பத்ரி பிரசாத், காயல்பட்டினம் நகர பொறுப்பாளர் ஹனிபா, மாவட்ட தகவல் தொழிற்நுட்பப்பிரிவு செயலாளர் நீதிபாலன் கார்த்திக், மாவட்ட தகவல் தொழிற்நுட்பப்பிரிவு இணைச்செயலாளர் மபத்லால், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர் விஜய் குட்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மொய்தீன் கான், ரோகினி, அமிர்தா, சஜினா, கணேசபுரம் முருகேசன், ஆலந்தலை 25 மற்றும் 26 வார்டு நிர்வாகிகள் கேஜிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


