தூத்துக்குடி வ..உசி., துறைமுகம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர், கிளீனர் காயம் அடைந்தனர்.
தூத்துக்குடியில் இன்று அதிகாலை நிலக்கரி ஏற்றி வந்த டிப்பர் லாரி டிரைவரின் கட்டுப்பாடை இழந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்து வஉசி துறைமுக ஆணையத்தின் தீயணைப்பு படை நிலைய அதிகாரி பாட்ஷா தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காயம் அடைந்த டிரைவர், கிளீனர் ஆகிய இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


