தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலூகா முத்தாலங்குறிச்சி கிராமத்தில் பெருமாள் சாமி , கள்ளவாண்ட சுவாமி கோயில் கொடைவிழா நடந்தது. இந்த இந்த பகுதியில் மிகவும் சிறப்பாக போற்றப்படும் வேட்டைபானை போடும் நிகழ்வு நடந்தது.
இந்த விழாவை முன்னிட்டு முதல் நாள் குடியழப்புடன் கோயில் கொடை விழா துவங்கியது. இரண்டாம் நாள் காலை முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து ஸ்ரீவெங்கிடசலாபதி பெருமாள் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதன் பின் அபிசேகம் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மதிய கொடை விழா நடந்தது. இரவு 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 108 பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றினர். தொடர்ந்து வில்லுபாட்டு, பெண்களின் கும்பி போன்றவை நடந்தது. தொடர்ந்து இரவு கொடை விழா நடந்தது.

மூன்றாம் நாள் இரவு நேர்ச்சை தாரர்கள் பூப்பெட்டி உள்பட நேர்ச்சை பொருள்கள் எடுத்து வர ஊர் வலம் நடைபெற்றது. அதன் பின் ஊர்வலம் ஸ்ரீவெங்கிடாசலபதி பெருமாள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஐந்தாம் நாள் திருவிழாவாக கள்ளவாண்ட சுவாமி கோயிலில் வேட்டைபானை போடுதல் எனும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து நேர்ச்சை நிறைவேற்றினர். தொடர்ந்து வேட்டைக்கு செல்லும் கள்ளவாண்ட சுவாமி சுமார் 21 கொதிக்கும் மண்பானையில் கொதிக்கும் நீரை தென்னம்பாலையால் தனது தலையில் ஊற்றி சாமியாடும் நிகழ்வு நடந்தது. அவருடன் மற்ற சாமியாடிகளும் வேட்டைப்பானை போட்டனர். இதைக்காண உள்ளூர் மக்கள் மற்றும் அருகில் உள்ள மக்களும் கூடியிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை முத்தாலங்குறிச்சி ஸ்ரீவெங்கிடாலபதி கள்ளவாண்ட சுவாமி கோயில் கொடை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


