தூத்துக்குடியில் வ.உ.சி கல்லூரி அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி கல்லூரி சாலையில் பணிகள் முடியும் நிலையில் உள்ள செயற்கை புல் வெளியுடன் கூடிய விளையாட்டு மைதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாநகர மக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


