சாத்தான்குளம் அருகே மீரான்குளம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆம்னி வேன் கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.
இதனைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சாலை ஓரத்தில் உள்ள கிணறுகளை கணக்கெடுத்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதன் ஒரு பகுதியாக நேற்று தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இந்த சம்பவம் நடந்த கிணறை வந்து பார்த்து ஆய்வு செய்தனர்.
இதையடுத்து ஆம்னி கார் கிணற்றில் விழுந்த பகுதியின் அருகே தற்போது நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை ஓரத்தில் சாலை தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


