கோவில்பட்டி அருகேயுள்ள கே.ராமநாதபுரம் பகுதியில் மீண்டும் நியாய விலைக் கடை செயல்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கே.துரைசாமிபுரம் பஞ்சாயத்து, கே.ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், எங்கள் ஊரில் பொது சேவை மையத்தில் ரேஷன் கடை இயங்கி வந்தது.
ஆனால் தற்போது எங்கள் ஊரில் இருந்து பல கிமீ தொலைவில் உள்ள கே.துரைசாமி புரத்திற்கு வந்து பொருட்களை வாங்கச் சொல்கிறார்கள். இதனால் பொதுமக்கள், முதியவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே மீண்டும் எங்கள் பகுதியில் ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்னர்.


