தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று இரவு ரோந்து மேற்கொண்டார்.
பின்னர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள வடபாகம் புறக்காவல் நிலையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த காவலரிடம், பொதுமக்கள் நலன் கருதி பேருந்து நிலைய வளாகத்திற்குள் அவ்வப்போது ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.


