திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய பெண் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் நேற்று மதியம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தார். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய பெண் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


