நெல்லை டவுண் வெங்கடாசலபதி மண்டபத்தில் வைத்து எழுத்தாளர் மு.கணேசன் எழுதிய பொருநை தாமிரபரணி நூல் வெளியிட்டு விழா நடந்தது. நெல்லை மேயர் இராமகிருஷ்ணன் என்ற கிட்டு தலைமை வகித்தார். புத்தகத்தினை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வெளியிட்டார். கவிஞர் ஸ்ரீவை சுரேஷ் தேவர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். நினைவு பரிசை உடற்கல்வி ஆசிரியர் இம்மானுவேல் ஜெபசெல்வன் வழங்கினார். கவிஞர் கோமதி வரவேற்றார். நிகழ்ச்சியை சமூக ஆர்வலர் நம்பி குமார் தொகுத்து வழங்கினார். இநத நிகழ்ச்யில் தாமிரபரணி பாதுகாப்பு பொதுச்செயலாயர் இதழாளர் அய்யோ நூல் நோக்க உரையாற்றினார். லிடடில் பிளவர் பள்ளி தாளாளர் மரியசூசை, எழுத்தாளர் சக்திவேலாயுதம், எழுத்தளார் முனைவர் இளங்கோ மணி , தொடர் பதிப்பகத்தின் உரிமையாளர் விக்ரமன், ஓவியர் வை.ராஜேஷ், கராத்தே மாரியப்பன், தூய தமிழ் பற்றாளர் சிவ செல்வ மாரிமுத்து, நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் நிறுவனர் வழகறிஞர் மாணிக்கராஜா, காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுசசெயலாளர் வழக்கறிஞர் ராஜன், திரைப்பட இயக்குனர் ஏ.கே. போஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். எழுத்தாளர் மு.கணேசன் ஏற்புரை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளுவர் இரத்ததான கழக நண்பர்கள் செய்திருந்தனர்.


