கடம்பூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகே குப்பனாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் கார்த்திக் (31). சென்னையில் ஹோட்டல் வைத்துள்ளார். இவருக்கும், கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் கருப்பசாமி என்ற கார்த்திக் என்ற லெப்ட் கார்த்திர்ரும் முன்விரோதம் இருந்துவந்ததாம்.
இந்நிலையில் க. கார்த்திக் தனது ஊர் கோயில் திருவிழாவுக்காக கடந்த மாதம் 29ஆம் தேதி ஊருக்கு வந்திருந்தார். பின்னர் சென்னை செல்வதற்காக சம்பவத்தன்று புறப்பட்டு சென்றபோது, கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் கருப்பசாமி என்ற கார்த்திக் என்ற லெப்ட் கார்த்திக், உள்பட 8 பேர்க, கார்த்திகை, அவதூறாக பேசி தாக்கிவிட்டு ஓடி விட்டார்களாம். இதில், காயமடைந்த கார்த்திக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, கருப்பசாமி என்ற கார்த்திக் என்ற லெப்ட் கார்த்திக் (25), அவரது சகோதரர் மாரிச்செல்வம் என்ற குஞ்சு (30), ஸ்ரீனிவாச நகரை சேர்ந்த சோலையப்பன் மகன் தினேஷ் என்ற தீனா (23), சாஸ்திரி நகரைச் சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் மணிகண்டன் (25), கொம்பையா மகன் மாடசாமி என்ற மகேஷ் (20), சாஸ்திரி நகரை சேர்ந்த முருகேசன் மகன் சிவபெருமாள்(29), பங்களா தெருவை சேர்ந்த வெள்ளத்துரை மகன் விஜயகுமார் (29) ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சின்ன ஜமீனை போலீசார் தேடி வருகின்றனர்.


