தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழாவின் 7ஆம் நாளான இன்று மாலை நடராஜப் பெருமான் சிவப்பு சாத்தி பித்தளை சப்பரத்தில் ரதவீதி உலா நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா மே 1ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 7ஆம் நாளான இன்று காலை 7.35 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ நடராஜப் பெருமான் உருகு சட்ட சேவை, 8.00 மணிக்கு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் ரத வீதி உலா நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ நடராஜப் பெருமான் கும்பாபிஷேகம், 10.30மணிக்கு நடராஜப் பெருமான் மாடவீதி சுற்றி தெப்பக்குளம் அருள்மிகு சுந்தரபாண்டிய விநாயகர் கோயில் விழா மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, 7ஆம் திருநாளான இன்று சிவப்பு சாத்தி சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது. தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது.
இரவு 7.00 மணிக்கு சிகப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் எழுந்தருளினர். பின்னர் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தங்கப் பல்லக்கில் அருள்மிகு சோமாஸ்கந்தர் – பாகம்பிரியாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகியோர் சப்பரங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 10ம் தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


