சாத்தான்குளம் அருகே முன்னாள் ஊராட்சி தலைவர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக காங்கிரஸ் ஐஎன்டியுசி மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்அருகேயுள்ள பொத்தகாலன் விளையை சேர்ந்தவர் அ. லூர்துமணி (49). முன்னாள் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர். தற்போது விவசாய சங்க தலைவர் மற்றும் ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சாஸ்தாவி நல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மரிய அந்தோணி ஜார்ஜ் என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் மரிய அந்தோணி ஜார்ஜ் குறித்தும், அவரது தொழில் குறித்தும் அவதூறு பரப்பியதுடன் மரிய அந்தோணி ஜார்ஜ் உள்பட 8 பேரால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் லூர்துமணி அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மரிய அந்தோணி ஜார்ஜ் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் உதவி ஆய்வாளர் பொன்னு முனியசாமி விசாரணை நடத்தி லூர்துமணியை நேற்று கைது செய்தார்.


