பெருங்குளத்தில் உள்ள தலைமை திருமடத்தில் பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ சத்தியஞான தரிசினிகள் குருபூஜை நடைபெற்றது.
முன்னதாக ஆதிகாலை நீடாமங்கலம் சுவாமிநாதன் குழுவினரின் மங்கள இசையுடன் குருபூஜை நிகழ்வு துவங்கியது. தூத்துக்குடி தேவார இசைப்பள்ளி முதல்வர் சுப்ரமணிய ஓதுவாரின் திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது. தொடர்ந்து ஆன்மார்த்த மூர்த்தி வழிபாடும், பெருங்குளம் சித்தர் தபோவனத்தில் உள்ள குருமூர்த்த திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆதீன திருமடத்தில் உள்ள ஞானப்பிரகாசர் அரங்கத்தில் பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103வது குருமகா சந்நிதானம்ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் ஆதீன குருமுதல்வருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தினார்.
இலண்டன் முருகன் கோவில் உதவி அர்ச்சகர் கணேஷ் குருக்கள் ஆன்மீக பணிகளை பாராட்டி ரூ.5ஆயிரம் பொற்கிழியும், “சைவ சமய சேவா ரத்தினம்” என்ற விருதும், சென்னை வ.உ.சி நற்பணி மன்ற தலைவர் பம்மல் ராஜ்குமார் ஆன்மீகம் மற்றும் சமுதாய பணிகளை பாராட்டி ரூ.5ஆயிரம் பொற்கிழியும், “சாதனை சக்கரவர்த்தி” என்ற விருதும், பிள்ளையார்பட்டி சிவஸ்ரீ அண்ணா இணைய தள அறக்கட்டளையில் இருந்து திருநெல்வேலி சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் தேவஸ்தான ஸ்தானீகர் பிச்சையா மூர்த்தி பட்டர் ஆன்மீக பணிகளை பாராட்டி 5ஆயிரம் பொற்கிழியும், “சிவாகம ரத்தினம்” என்ற விருதும், இலண்டன் சிவஞான சுந்தரம் தம்பு ஆன்மீக பணிகளை பாராட்டி 5ஆயிரம் பொற்கிழியும்,
“ஆன்மீக செம்மல்” என்ற விருதும், சென்னை M.V.ஜெயசங்கர் நிறுவிய சிவசுந்தரி அறக்கட்டளையில் இருந்து காஞ்சிபுரம் திருஞான கதிர்வேல் சுப்ரமணியம் திருமுறை பணிகளை பாராட்டி 5ஆயிரம் பொற்கிழியும், ‘திருமுறை இசை வாரிதி” என்ற விருதும், தூத்துக்குடி புனிதர் பேரவை அறக்கட்டளையில் இருந்து இலண்டன் இரவீந்திரன் ஆன்மீக பணிகளை பாராட்டி 5ஆயிரம் பொற்கிழியும், “நற்பணி நாயகர்” என்ற விருதும், தூத்துக்குடி சூ.சுப்பையா பிள்ளை – ஈஸ்வரம் அம்மாள் நினைவு கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்குவதற்காக ரூ.50ஆயிரம் நிரந்தர வைப்பு நிதியாக வழங்கிய தூத்துக்குடி சு.மீனாட்சிநாதன் அவர்களுக்குபொன்னாடை போர்த்தி ஆசிர்வதித்தார்கள்.

எட்டையபுரம் அடியவர்க்கு அடியவர் திருக்குழாம் சார்பாக “உழவாரமும் தேவாரமும்” என்ற நூலும், நற்குடி வேளாளர் முத்தமிழ் மன்றம் சார்பாக “திருவழுதீச்சுரப்பதிகம்” ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு மாகேஸ்வரபூஜை நடைபெற்றது. மாலையில் பெருங்குளம் திருவழுதீஸ்வரர் ஆலயத்தில் ஆதீனகர்த்தர் பெரு வழிபாடற்றலும், ஆதீன குருமுதல்வர் சிவிகையில் பட்டணப் பிரவேசமும் நடைபெற்றது. இரவில் குருமகா சந்நிதானம் சிவஞான கொலுக் காட்சியுடன் குருபூஜை நிறைவு பெற்றது. குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை குருமகா சந்நிதானம் அருளாணையின் வண்ணம் காறுபாறு அழகிய திருச்சிற்றம்பலமுடைய தம்பிரான் செய்திருந்தார்


