தூத்துக்குடியில் உலக திருக்குறள் மையம் சார்பில் பேச்சரங்கம் நிகழ்வு நடைபெற்றது. .
தூத்துக்குடி சி எம் மேல்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் மையம் சார்பில் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் தலைமையில், “திருக்குறள் பெரிதும் வலியுறுத்துவது அறத்துப்பாலா? பொருட்பாலா?காமத்துப் பாலா?” என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடைபெற்றது. உலக திருக்குறள் மையம் மாவட்டச் செயலாளர் அன்பழகன் நடுவராக பணியாற்றினார்.
அறத்துப்பாலே என்று செய்யது முகமது ஷெரிப், ஆசிரியர் தேவிகா ஆகியோர் பேசினர். பொருட்பாலே என்று பால் ராஜேந்திரம், நெல்லை தேவன் ஆகியோர் பேசினர். காமத்துப்பாலே என்று ஆசிரியர் சுந்தரி, பாவலர் இளமுருகு ஆகியோர் பேசினர். முன்னதாக தனராசு வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக பொன்ராசு நன்றியுரை ஆற்றினார்


