தூத்துக்குடியில் ஶ்ரீசங்கர இராமானுஜ ஜெயந்தியை முன்னிட்டு சமஸ்டி உபநயனம் 6 வடுகளுக்கு உபயதாரர்கள் மூலம் உபநயனம் நடைபெற்றது.
இதில் ஶ்ரீ காஞ்சி காமகோடிபீடம் ஜெகத் குரு பூஜ்யஶ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமி மற்றும் புது பெரியவா ஶ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி இருவரும் இந்த சமஸ்டி உபநயனம் நன்கு நடைபெற ஆசீர்வதித்து ஶ்ரீ காமாட்சி வெள்ளி டாலர் மற்றும் அட்சதை, ஶ்ரீ காமாட்சி பூஜை, குங்குமம், விபூதி பிராசதம் மற்றும் மகா பெரியவா பெரிய படம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் அனைத்தும் பஜனை மடம் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


