தூத்துக்குடி சிதம்பர நகர் மெயின் ரோட்டில் மாநகராட்சி பேரங்காடியில் நியுமூவ் பிசியோதெரபி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி சிதம்பர நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மாநகராட்சி பேரங்காடியில் நியுமூவ் பிசியோ தெரபி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. மருத்துவர் ஹிரிதிக் முத்துவேல் அனைவரையும் வரவேற்றோர். விழாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் ராஜவேல் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இங்கு கழுத்துவலி, இடுப்புவலி, பக்கவாதம், முகவாதம், தண்டுவட பாதிப்புகள், உடல் தசை எடைகுறைப்பு, தசைப்பிடிப்பு, சுளுக்கு, தோள்பட்டை வலி, எலும்பு தேய்மானம் போன்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது. திறப்பு விழாவில் பிஎஸ்என்எல் அதிகாரி ராமசாமி, சண்முக சுந்தரி, மணிகண்டன், கல்பனா, சண்முகத்தாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


