தூத்துக்குடியில் மாநகராட்சி பொதுக் கழிவறையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகேயுள்ள பொதுக் கழிப்பிடத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கிடைத்த தககவலின்பேரில், காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 3வது தெருவை சேர்ந்த செல்லப்பாண்டியன் மகன் கனகராஜ் (35) என்பது தெரியவந்தது. இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்ததாகவும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே வந்தவர் பின்பு வீடு திரும்பவில்லை என்றும் தெரியவந்தது.


