சாத்தான்குளம் அருகே நிலப்பிரச்னையில் தம்பதியை தாக்கியதாக தந்தை, மகன்கள் உள்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கண்டு கொண்டான் மாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (65). இவருக்கும் அவரது சகோதரர் சுப்பையா (75) என்பவருக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முருகன், அவரது மனைவி ஆகியோர் தோட்டத்தில் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த சுப்பையா மற்றும் அவரது மகன்கள் ஆறுமுகம்(35), சண்முகசுந்தரம் ஆகிய 3பேரும் தம்பதியை அவதூறாக பேசி தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்கு பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட தந்தை, மகன்கள் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


