தூத்துக்குடி செல்போன் கடையின் பூட்டை உடைத்து 6 செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் எம் சவேரியாபுரத்தைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் மகன் மைக்கேல் (30), இவர் முத்தையாபுரம் அத்திமரப்பட்டி விலக்கு ரோட்டில் ஸ்டார் மொபைல் என்ற பெயரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இன்று காலை கடையை திறந்து பார்த்த போது கடையின் ஆஸ்பெட்டாஸ் கூரை உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், கடையில் இருந்த 6 செல்போன்கள், 4 இயர்போன் ஆகியவை திருடுபோயிருந்தது. இதன் மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும். இதுகுறித்து புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


