தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாகவும் துரிதமாகவும் நிறைவு செய்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட வேண்டுமென வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் கனிமொழி எம்பி அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று(28.04.2025), மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், முன்னிலையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகர, நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒன்றிய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து தொடர்ந்து ஆய்வுமேற்கொள்ளப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுவருகிறது.
அதன்படி, இன்றையதினம் நடைபெற்ற குழுக்கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS), பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (PMAY (G), பிரதம மந்திரி கிராம சடக் யோஜனா (PMGSY), தூய்மை பாரத இயக்கம்(SBM (G), பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டுத் திட்டம் (MPLADS), ஜல் ஜீவன் திட்டம் (JJM), தீன்தயாள் அந்தியோதயா யோஜனா (NRLM), தீன்தயாள் உபத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா (DDU-GKY), தூய்மை பாரத இயக்கம் (SBM) (U), ஸ்மார்ட் சிட்டி திட்டம் (SCM), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (PMAY (U),
தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம் (NSAP), தேசிய ஊரக குடிநீர் திட்டம் (NRDWP), ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா (RKVY), ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேலாண்மைத் திட்டம் (IWMP), பிரதமர் மந்திரி க்ரிஷி சிஞ்சாயீ யோஜனா (PMKSY), பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY), மண்வள அட்டை இயக்கத் திட்டம் (Soil Health Card), நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்குதல் (DILRMP), தேசிய சுகாதாரத் திட்டம் (NHM), ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம் (IPDS), சர்வ சிக்ஷ அபியான் (SSA), டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பொது இணைய அணுகல் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (ICDS),
மதிய உணவுத் திட்டம் (Mid-Day Meal Scheme), பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), பிரதம மந்திரி கனிஜ் சேஷத்ரா கல்யாண் யோஜனா (PMKKKY), பரம்பரகத் க்ரிஷி விகாஷ் யோஜனா (PKVY), பிரதமந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா (PMAGY), பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY), தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (NFSA), Infrastructure related programmes like Telecom. Railways, Highways, Waterways, Mines, etc., உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்தும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) செயல்பாடுகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்தும் மற்றும் சாலைப் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளின் தற்போதைய நிலைகள் குறித்தும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்றுவரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாகவும் துரிதமாகவும் நிறைவு செய்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.30,54,000/- மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.1,05,00,000/- செலவில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளையும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துத்துறை சார்பில் பிறந்த குழந்தைகளின் செவித்திறனை மிகத் துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறியும் வகையில் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட்ட QSCREEN MACHINE OAE – ABR கருவிகளை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.1 இலட்சம் விபத்து மரண நிவாரணத் தொகைக்கான காசோலையையும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் தமிழகத்தில் இயங்கிவரும் 316 அரசு நகர்புற சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்கள் பதிவு, பிரசவங்களின் எண்ணிக்கை, மகப்பேறு மற்றும் குழந்தைகளுக்கான சேவைகள், ஆய்வகங்களில் நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை, உள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சேவைகளுக்கான மார்ச் மாத மாநில தரவரிசைப் பட்டியிலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட பாத்திமா நகர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் இடத்தையும், கணேஷ் நகர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இரண்டாம் இடத்தையும், முள்ளக்காடு நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நான்காம் இடத்தையும், தருவைரோடு நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஐந்தாம் இடத்தையும், மடத்தூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆறாம் இடத்தையும் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.
இக்கூட்டத்தில், மேயர் பெ.ஜெகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வ.கி.தீபு, நகர் மன்றத் தலைவர்கள் கருணாநிதி (கோவில்பட்டி), சிவஆனந்தி (திருச்செந்தூர்), முத்து முஹம்மது (காயல்பட்டிணம்), மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யாழினி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


