தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையில் போலீசார் ஈசிஆர் சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் கே.வி.கே., நகரைச் சேர்ந்த செல்வகுமார் (28), பிரையண்ட் நகரைச் சேர்ந்த பாலமுருகன் (25) என்பதும் அவர்கள் 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


