கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் 29 டன் ரேஷன் அரிசியை பதுக்கிய வழக்கில் கைதானவரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29 டன் ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஞானமுரளி, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன், மற்றும் ஒஏஐயூ பிரிவைச் சேர்ந்த தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 7பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 5 பேரை கைது செய்தனர். இதில், பன்னீர் குளம் கிராமத்தைச் சேர்ந்த சப்பாணி முத்து (40) மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பேரூரணி சிறையில் இருந்து பாளை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


