இளைஞரை காரால் மோதியும் அரிவாளால் தாக்கியும் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில், கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை காரால் மோதியும் அரிவாளால் தாக்கியும் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கயத்தாறு கப்புலிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி மகன் சண்முகராஜ் (30) மற்றும் வெள்ளபாண்டி மகன் மகாராஜன் (34) ஆகிய இருவரையும் இன்று (27.04.2025) கயத்தாறு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


