கோவில்பட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் பெயின்டிங் வேலை பார்த்து வந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரைச் சோ்ந்த மைக்கேல் மகன் முத்துக்குமாா் (19). பெயின்டிங் தொழிலாளியான இவா், நேற்று தங்கப்ப நகா் பகுதியிலுள்ள வீட்டில் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, பெயின்டிங் மிஷின் வயரில் மின்கசிவு ஏற்பட்டதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம்.
இதில், மயக்கமடைந்த முத்துக்குமாரை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


