தூத்துக்குடியில் படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்து பர்னிச்சர் கடை அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி பூபால்ராயர் புரத்தைச் சேர்ந்தவர் கல்யாணி மகன் செல்வராஜ் (45) இவர் ரகுமத்துல்லா புரத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இன்று மாலை கடைக்கு வந்தவர் படிக்கட்டில் ஏறும்போது திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


