தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் மாவட்டச் செயலாளர் எம்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கழிப்பிடம், குடிநீர் இதுபோன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால் மாணவ,மாணவிகள் பெரும் சிரமத்தில் இருக்கின்றனர்.
மேலும் டிசைனிங் கோர்ஸ் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கணினி வசதியை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் மாவட்டக்குழு சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.


