கோவில்பட்டி அருகே அரிவாளுடன் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் பாண்டவர்மங்கலம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள கண்மாய்க் கரை அருகே நின்று கொண்டிருந்தவரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர்.
அவரை சோதனையிட்டபோது, அரிவாளை மறைத்து வைத்திருந்ததும், கீழப்பாண்டவர்மங்கலம் கீழ காலனியைச் சேர்ந்த சமுத்திர பாண்டியன் மகன் செந்தூர்குமார் (21) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.


