தூத்துக்குடியில் ரமலான் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகைகள் நடத்தினர். பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் இமாம் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. ரோச் பூங்காவில் நடந்த தொழுகையில் ஆயிரகணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில் திரேஸ்புரம், ரஹமத்துல்லா நகர், ஜெயிலாணி தெரு, புதுத்தெரு,முத்தம்மாள் காலனி, ஜாகிர் உசேன் நகர் பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் புத்தாடைகள் அணிந்து வந்த முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுபோல், கோவில்பட்டி, கயத்தாறு, காயல்பட்டினம் உட்பட மாவட்டம் முழுவதும் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டது.


