தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வியட்நாமைச் சேர்ந்த உலகின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை தொடங்குகிறது. இங்கு ட்ரைனி பிரஷ்ஷர்ஸ் பணியிடங்களுக்கு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவுகளில் 2021, 2022, 2023 & 2024 ஆம் ஆண்டுகளில் ஹரியர் இல்லாமல் தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலர்க்கும் வேலை வாய்ப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது .
கல்வித் தகுதி டிப்ளோமா மெக்கானிக்கல் & ஆட்டோமொபைல். வயது : 18 முதல் 25 வரை. சம்பளம் ரூ.20,000 மற்றும் பிற சலுகைகள். நேர்காணல் நடக்கும் இடம் “வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட், பிளாட் நம்பர் B – 1 / 11., சிப்காட் தொழில் பூங்கா, ஓட்டப்பிடாரம், சில்லாநத்தம், தூத்துக்குடி. நேர்காணல் நடக்கும் நாள் நேரம் : ஏப்.1 முதல் 4வரை காலை 8:30 மணி முதல் நடைபெறும். மேலும் 9962362244 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


