தூத்துக்குடியில் பிட்னஸ் சேலஞ்ச் என்ற தலைப்பில் பங்கெடுத்த நேரடி சார்பு ஆய்வாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை இன்று நடைபெற்றது.
பிட்னஸ் சேலஞ்ச் சவாலில் கலந்து கொண்டு உடல் நலத்தை பேணிக்காத்து வரும் 40-க்கும் மேற்பட்ட நேரடி சார்பு ஆய்வாளர்களின் முதல் மாத உடற்பயிற்சி மதிப்பாய்வுக்காக நேற்று தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆல்பெர்ட் ஜான், நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் முன்னிலையில் கோவில்பட்டி தியான் ஹெல்த் கேர் மருத்துவமனை சார்பாக முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் திவான் ஹெல்த் கேர் மருத்துவர் சிவகுமார் தலைமையிலான மருத்துவ ஊழியர்கள் மேற்படி சார்பு ஆய்வாளர்களுக்கு அவர்களது உடலில் உள்ள அறிகுறிகள், நுரையீரல், இருதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொழுப்பின் அளவு, உயரம், எடை போன்ற பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு முழு உடல் மருத்துவ பரிசோதனைகளை செய்தனர்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) மயிலேறும்பெருமாள் ஆகியோரும் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர்.


