தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு அன்னை பரதர் நல தலைமைச் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாநகரத் தந்தை, குடிநீர் தந்த கோமான் முன்னாள் நகராட்சி முன்னாள் தலைவர் குரூஸ் பர்னாந்து 95 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடியில் உள்ள அவரது கல்லறை, குவிமாடம் வட்டத்தெப்பம், பழைய மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், சங்கத்தின் தலைவர் சேவியர் வாஸ், அவைத்தலைவர் ஞாயம் ரோமால்ட், பொதுச் செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் காஸ்ட்ரோ மற்றும் நிர்வாகச் செயலர் ஆர்தர் மச்சாது துணைத்தலைவர்கள் ஜெயந்திராஜ், அ. ராபர்ட் ஒருங்கிணைப்பாளர் பெனோ, இணைச் செயலாளர் ஜெனிபர், செயற்குழு உறுப்பினர்கள் அ. ஜெகன்,பெப்பின் மிஸியர்,சிரோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


