தூத்துக்குடியில் முஸ்லீம் சமுதாய நலச்சங்கம் சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
தூத்துக்குடி தெற்கு புதுத்தெருவில் நடைபெற்ற விழாவிற்கு முஸ்லீம் சமுதாய நலச்சங்கம் தலைவர் ஏ.கே.மைதீன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமா சபை மாநில பொருளாளர் மற்றும் மாவட்ட அரசு ஷாஜி சா.முஜிபுர் ரஹ்மான் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் பி.மீராசா மரைக்காயர், செயலாளர் எம்.எஸ்.எப்.ரஹ்மான் ஆகியோர் தையல் மிஷின்கள், கிரைண்டர், 3 சக்கர சைக்கிள், சலவைப் பெட்டி, 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா 5 கிலோ உள்படரூ.5 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யம் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் பத்மநாபன் 38-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம், அப்துல் அழீம், முஸ்லீம் சமுதாய நலச்சங்க செயலாளர் எம்.எஸ்.ஐ.மூசா, பொருளாளர் ஜே.சாகுல் ஹமீது, கௌரவ ஆலோசகர்கள் கே.புர்கான் அலி, முகம்மது காசிம் மற்றும் நிர்வாகிகள் எம்.நூர்தீன், எஸ்.முகம்மது இஸ்மாயில், ஜே.அபுதாஹிர், கே.முகம்மது சலீம், எம்.ஷேக் மதார், எஸ்.அஜீஸ், ஏ.அலி ஜாஸிம், பி.அமீர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


