தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இரண்டாம் கட்டமாக 131 பேருக்கு கணினி பட்டாக்களை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் டூவிபுரத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன்,மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரண்டாம் கட்ட கணினி பட்டாக்களை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் பேருக்கு 131 பேருக்கு பட்டா வழங்கி பேசுகையில், மாப்பிள்ளையூரணி உள்பட அரசின் பயன்பாடுகள் இல்லா அனைத்து புறம்போக்கு நிலங்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார். வருவாய் கோட்டாட்சியர் தூத்துக்குடி ம.பிரபு, உதவி இயக்குனர் நில அளவை சீனிவாசன், வருவாய் வட்டாட்சியர் தூத்துக்குடி முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


