நாசரேத் அருகில் உள்ள திருமறையூரில் தென்பண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுடையோர் முன்னேற்ற சங்கம் சார்பில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மகளிர் தின விழாகொண்டாடப்பட்டது.
மாவட்டத் தலைவர் பேர்சில், மகளிர் அணிச் செயலாளர் இன்பராணி, மகேஸ்வரி, அருணா தேவி, பிரபாகர் ஆகியோர் தலைமை வகித்தனர்.திருமறையூர் செவித்திறன் குறையுடையோர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெசி கரோலின், சாத்தான்குளம் மிக்கேல் சிறப்புப் பள்ளி தாளாளர் சுசீலா மிக்கேல், நல்லாசிரியர் அன்பாய் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அமைப்புத் தலைவி சுகந்தி வரவேற்றார்.டாக்டர் மாலதி பத்மநாபன் குத்துவிளக்கு ஏற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் சட்ட ஆலோசகர் அட்வகேட் கிறிஸ் குமார் திருமறையூர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெசி மெட்டில்டா, மாவட்ட பொருளாளர் அழகு லட்சுமி, நாசரேத் பேரூராட்சி மன்றத் தலைவர் நிர்மலாரவி, பேச்சுப்பயிற்சி நிபுணர் ராஜேஸ்வரி, தசைப் பயிற்சி மருத்துவர் லட்சுமி, மகளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சூரியகலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தென்மண்டல ஒருங்கிணைந்தமாற்றுத்திறனுடையோர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஜான்சன், சிவனேசன், ஐசக், செண்பகவல்லி சித்ரா, கன்னி மரியாள், ரூபி, மாரிபாக்கியம் தமிழ்நாடு காது கேளாதோர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மெய் கண்டன், ஓய்வு பெற்ற ஆசிரியர் மகா பால் துரை உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.சிட்ஸ் கூட்டமைப்பின் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வி எஸ்தர் ராணி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிகளை டாக்டர் செல்வி ஜெஃப்ளின் மெர்சிபெல் தொகுத்து வழங்கினார்.


