தூத்துக்குடியில் குமிழ்முனை புத்தக வண்டி ஒருங்கினைப்பாளரை அமைச்சர் கீதாஜீவன் பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
தூத்துக்குடியில் வஉசி கல்லூரி முன்பு தினமும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை தனது இரு சக்கர வாகனத்தில் பல்வேறு சிறந்த எழுத்தாளர்கள் எழுதி சிறந்த புத்தகங்களை குமிழ்முனை புத்தக வண்டி ஒருங்கினைப்பாளர் சைமன் இலவசமாக வாசிக்க கொடுத்து வருகிறார். குழந்தைகள் படிக்கக் கூடிய சிறார் புத்தகங்களும் வைத்து அதிகமான குழந்தைகள் வாசிக்க வைத்து வருகின்றார்.
இந்நிலையில் சைமனின் சேவையை சமுகநலன்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பாராட்டி வாழ்த்தினார். மேலும், பல குமிழ்முனை புத்தக வண்டி வாசகர்கள் புத்தகம் வாசித்து பயன்பெற பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய சிறந்த புத்தகங்களை தேர்வு செய்து அன்பளிப்பாக புத்தகங்கள் வழங்கினார். தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், திமுக நிர்வாகி ஜீவன், அறங்காவலர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


