தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி கடந்த ஜுலை 6 ந்தேதி கலியாவூர் மருதூர் அணையில் துவங்கியது. இந்த பணியை கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார். எக்ஸ்னோரோ நி-றுவனத்தின் மூலம் வாடகை இல்லா இயந்திரம் மூலம் மற்றும் தனியார் அரசு உதவுயுடன் நதியை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மருதூர் அணை, செந்நெல்பட்டி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி ஆறாம்பண்ணை , கருங்குளம், கொங்கராயகுறிச்சி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் இந்த பணி நடந்து முடிந்துள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் அவர்களின் நிதி மூலம் இந்த பணி தொடர்ந்து வந்தது. இடையில் 1 மாதம் நிர்வாக காரணத்திற்காக இநத பணி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது மாவட்ட ஆட்சிதலைவர் இளம்பகவத் அவர்கள் ஆலோசனை படி நிதி பெறப்பட்டு மீண்டும் இந்த பணி துவங்கியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கத்தினர் இந்த பணிக்கு ஆதரவளித்து உள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளர்ர்கள். இன்று ஸ்ரீவைகுண்டம் அணைக்ட்டில் இருந்து தென் கரையில் ஆழ்வார்திருநகரி வரை கரையில் உள்ள முள்செடிகளை அகற்றும் பணி துவங்கியுள்ளது. இந்த பணியை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கதினை சேர்ந்த சந்துரு ஆகியோர் பார்வையிட்டனர்.


