வாஞ்சி மணியாச்சியில் இலக்கியச் செல்வர் குமரி ஆனந்தனின் 93 ஆவது பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
ஆங்கில ஏகாதிபதிய ஆட்சி காலத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதன் அவர்கள் சுட்டுக்கொன்று விட்டு தானும் மாய்த்துக் கொண்டார். அதன் நினைவாக அந்த ரயில் நிலையத்திற்கு வாஞ்சிநாதன் பெயரை சூட்ட வேண்டும் என்று குமரி ஆனந்தன் பல கட்டங்களாக சிறை சென்று போராடி வந்த நிலையில் தென்காசியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் என்று பெயர் சூட்டி அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காணும் இலக்கியச் செல்வர் குமரி ஆனந்தன் தனது 93 வது பிறந்த நாளை வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு, அவரது 93வது பிறந்த நாள் விழா வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் வர்த்தக காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் நல்லமணி பூமிநாதன் தலைமையில் கேக் வெட்டி, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலைய பெயர் பலகைக்கு மாலை அணிவித்து ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் பாஸ்கரன், தென்காசி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் தாயார்தோப்பு இராமர், நெல்லை மாநகர வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆப்ரகாம் வெஸ்லி, தென்காசி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் இயேசுராஜா, ஜெயபிரகாஷ், கார்த்திக் முருகேஷ்வரன் அலாவுதீன் ஸ்ரீதர் ஆகியோர் பங்குபெற்றனர், சிறப்பு விருந்தினர் மதுரை மாவட்ட சிறுபான்மையினர் துறை தலைவர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


