தூத்துக்குடியில் பெட்ரோல் போட்ட அடுத்த நொடி பைக் மளமளவென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது. இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் பெட்ரோல் பங்க் ஒன்றில் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட வந்தார். பெட்ரோல் போட்ட பின்னர் வாகத்தை இயக்க முயற்சித்தார். அப்போது பைக் திடீரென தீப்பற்றி மளமள வென எரியத் தொடங்கியது.
இதனை சுதாரித்துக்கொண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை பார்த்த பெட்ரோல் போட வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்


