சாத்தான்குளம் அருகே முன் விரோதத்தில் சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கிய வழக்கில் 6 பேர்களை போலீசார் இன்று கைது செய்தனர். இவர்களில் 2பேர் தவறி விழுந்ததில் கைமுறிவு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் (55). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் தனது மகன் சுரேஷ்(19) என்பவருடன் கடந்த 11ம் தேதி அருகிலுள்ள கடையில் பொருள்கள் வாங்க பைக்கில் சென்ற போது அதே பகுதி பனைக்குளத்தைச் சேர்ந்த தேவதிரவியம் மகன் ராஜா மிக்கேல், அரசன்குளம் பேரின்பராஜா, நொச்சிக்குளம் அல்போன்ஸ், சாம்ராஜா, பேய்க்குளம் சங்கரலிங்கம் மற்றும்வளன் உள்ளிட்ட6 பேர், காமராஜிடம் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து தாக்கியதில்அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது
இதில்காயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காமராஜ் மகன் சுரேஷ் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் எட்வின் அருள்ராஜ் வழக்கு பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரைதேடிவந்தனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் இருந்த ராஜமிக்கேல், அரசன்குளம் பேரின்ப ராஜா உள்ளிட்ட6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் ராஜமிக்கேல், பேரின்ப ராஜா இருவருக்கும் தவறி விழுந்ததில் கைமுறிவு ஏற்பட்டிருந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் மற்ற 4பேரையும் போலீசார் கைது செய்து பேர் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்


